அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி உள்ள விடாமுயற்சி படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். ‘பிரேக்டவுன்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது. த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் படத்தின் ரீலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில் பிப்ரவரி 6-ம் தேதியான நேற்று இந்த படம் வெளியானது. விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்த இப்படம் வசூலிலாவது தூள் கிளப்பி இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த படக்குழுவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதன் முதல் நாள் வசூல் நிலவரம் உள்ளது.
அஜித்தின் விடாமுயற்சிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெடுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் முதல் நாளிலேயே ரூ.22 கோடி கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான அஜித்தின் துணிவு படம் முதல் நாளிலேயே 23 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
நாடு மூழுவதும் சேர்ந்து இப்படம் 30 முதல் 35 கோடி ரூபாய் வசூலித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. சர்வதேச அளவில் 17 முதல் 18 கோடியை மொத்த வசூலாக பதிவு செய்து இருக்கலாம் என தெரிகிறது. அதன்படி, முதல் நாளிலேயே விடாமுயற்சி திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.46 முதல் ரூ.50 கோடி வரை வசூல் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரம், விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தி கோட் முதல் நாள் சர்வதேச அளவில் ரூ.126.32 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.