fbpx

வாரத்தின் முதல் நாள்..!! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவை பொறுத்த வரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதுகாப்பு கருதில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. அதேபோல், இந்தாண்டு தொடங்கியதில் இருந்தும் இதே நிலையே நீடிக்கிறது.

அந்த வகையில், சென்னையில் இன்று (ஜனவரி 6) ஆபரணத் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 7,215-க்கும் ஒரு சவரன் ரூ.57,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒரு கிராம் ரூ.5,960-க்கும் ஒரு சவரன் ரூ.47,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.99-க்கும், ஒரு கிலோ ரூ.99,000-க்கும் விற்பனையாகிறது.

Read More : இந்தியாவிற்குள்ளும் நுழைந்த HMPV வைரஸ்..!! 8 வயது குழந்தை பாதிப்பு..!! பீதியில் மக்கள்..!!

English Summary

There was no change in the price of gold jewellery in Chennai today (January 6).

Chella

Next Post

பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..? - வெளியான பரபரப்பு தகவல்

Mon Jan 6 , 2025
With Justin Trudeau's Resignation Coming, What's Next For Canada And The Liberals?

You May Like