fbpx

President 2024: மார்ச் 5-ம் தேதி முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள் வழங்கும் குடியரசு தலைவர்..‌!

முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள் மார்ச் 5-ம் தேதி குடியரசுத்தலைவரால் வழங்கப்படும்.

2024 மார்ச் 5-ஆம் தேதி விஞ்ஞான் பவனில் முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகளை வழங்கவிருக்கிறது. குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தலைமை தாங்கும் இந்த நிகழ்ச்சியில் நீர் துறையில் சிறந்து விளங்கும் நகரங்களும், மாநிலங்களும் கௌரவிக்கப்படும். நகரங்கள் மற்றும் மாநிலங்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பிரதிபலிக்கும் வகையில், 130 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மதிப்புமிக்க குடிநீருக்கான தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்தந்த மக்கள்தொகை பிரிவுகளில் (1 முதல் 10 லட்சம் வரை, 10 முதல் 40 லட்சம் வரை, 40 லட்சத்திற்கு மேல்) சிறந்த செயல்திறன் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுகளின்படி தங்கம் என்பது முதல் இடத்தையும், வெள்ளி என்பது இரண்டாவது இடத்தையும், வெண்கலம் மூன்றாவது இடத்தையும் குறிக்கின்றன.

Vignesh

Next Post

Lok Sabha தேர்தலுக்கு முன் அமலாகிறது குடியுரிமை திருத்த சட்டம்..!! மத்திய அரசு முடிவு..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

Wed Feb 28 , 2024
குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தால் குடியுரிமை வழங்க சிஏஏ (குடியுரிமை (திருத்த) சட்டம்) வகை செய்கிறது. குறிப்பாக, இந்த 3 நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் […]

You May Like