fbpx

‘தனி விமானம் வைத்திருந்த முதல் ஹீரோயின்..!’ அதுவும் அந்த காலத்திலேயே!! யார் அவர்?

தமிழ் சினிமா வரலாற்றில் மமுதன்முதலாக தனக்கென தனி விமானம் வாங்கிய முதல் நடிகை யார் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் சினிமாவில் 1960, 70களில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை கே.ஆர். கேஆர் விஜயா. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார் கே. ஆர்.விஜயா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கனடா  உள்ளிட்ட மொழிகளிலும் தனது அசாத்திய நடிப்பால் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் கே.ஆர்.விஜயா.

புன்னகை அரசி என்றழைக்கப்பட்ட கே.ஆர்.விஜயா சென்னையில் வசித்து வந்த கேரளா குடும்பத்தை சேர்ந்தவர். குறுகிய காலகட்டத்தில் முன்னணி டாப் நடிகையாக வலம் வந்தார். 1963ம் ஆண்டு தனது 15 வது வயதில் கற்பகம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் தென்னிந்தியா மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் ஆண்டிற்கு குறைந்தபட்சம்  10 படங்களாவது திரையரங்குகளில் வெளியாகுமாம். அந்த காலகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆருக்கு நிகராக சம்பளம் வாங்கிய நடிகை இவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்மற்றும் ஹிந்தி என்று இவர் நடிக்காத இந்திய மொழிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிக சிறந்த நடிகையாக கடந்த பல ஆண்டுகளாக பயணித்து வருகின்றார். 4 தலைமுறை நடிகர்களோடு பயணிக்கும் கே.ஆர். விஜயா தமிழ் சினிமாவின் மணிமகுடமாக திகழ்கிறார். 

60 ஆண்டுகளும் மேலாக இன்றுவரை திரைப்படங்களில் நடித்து வரும் கே.ஆர்.விஜயா பற்றி யாரும் அறியாத ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா வரலாற்றை தனக்கென்று முதன் முதலில் தனி விமானம் வாங்கிய நடிகை கே.ஆர்.விஜயா தான்.

Read more ; “மாப்ள.. உங்க அழகுமணி வந்திருக்கு நிமிர்ந்து பாருங்க..” அந்த அழகுமணி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

Next Post

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 21 பேர் பலி... 69 பேர் படுகாயம்...!

Thu May 30 , 2024
ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, காயமடைந்த 69 பேர் விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலையில் அக்னூரில் உள்ள சுங்கி மோர் பகுதியில் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் ஹத்ராஸிலிருந்து (உ.பி) யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையை விட்டு விலகிச் சென்றது. அக்னூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

You May Like