ராணிப்பேட்டை அருகே விரும்பிய காதலியை கரம் பிடித்த இளைஞர், முதல் இரவுக்கு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும், ஒருவரை, ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததால், பெற்றோர்கள் இந்த காதலுக்கு பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆகவே கடந்த 17ஆம் தேதி இந்த காதல் ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அன்றைய தினமே மணமகளான ஸ்வேதாவின் வீட்டிற்கு மறு வீடு சம்பிரதாயத்திற்காக, புது மணமக்கள் இருவரும் சென்று உள்ளனர்.
மணமகள் வீட்டில் புதுமண தம்பதிகளுக்கு முதலிரவு நடத்தப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டனர். முறைப்படி முதலிரவும் நடந்துள்ளது. ஆனால், திருமணம் நடந்த அன்றைய இரவே, முதலிரவு நடந்த மகிழ்ச்சியில் மறுநாள் காலை ஸ்வேதா எழுந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, ஸ்வேதா ஆசை, ஆசையாக உயிருக்கு, உயிராக காதலித்து கரம் பிடித்த தன்னுடைய காதல் கணவர் சரவணன், அந்த முதலிரவு அறையிலேயே தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்த ஸ்வேதா, ஒரு கணம் உறைந்து போய் நின்று விட்டார். பின்னர் சுயநினைவுக்கு வந்த அவர், கதறி அழ தொடங்கினார்.
ஸ்வேதாவின் அழுகுரல் கேட்டு அங்கு ஓடி வந்த குடும்பத்தினர், சரவணன் தூக்கில் பிணமாக தூங்குவதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக, இதுகுறித்து, காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சரவணன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஸ்வேதாவின் குடும்பத்தினரிடமும், ஸ்வேதாவிடமும் இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், இதுவரையில், சரவணன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய விபரம் தெரிய வரவில்லை.