fbpx

மகிழ்ச்சி…! இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும்..! பிரதமர் மோடி அறிவிப்பு…!

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். Modi’s guarantee 2024 என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

25 கோடி ஏழைகளை ஏழ்மையிலிருந்து தனது தலைமையிலான அரசு மீட்டெடுத்திருக்கிறது என பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் என பிரதமர் மோடி அறிவித்தார். நாடு முழுவதும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும். 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை. 2025ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.

Vignesh

Next Post

“நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது” - இஸ்ரேல் ஈரான் தாக்குதல் குறித்து டிரம்ப்

Sun Apr 14 , 2024
நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல் மீதான் ஈரானின் தாக்குதல் நடந்திருக்காது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. ஜெருசலேம் நகரின் சில இடங்களில் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னதாக […]

You May Like