fbpx

விழா மேடையில் இடம் கொடுக்காத ஆத்திரம்..!! காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ..!! வெடித்தது புதிய சர்ச்சை..!!

பாஜக எம்எல்ஏ ஒருவர் காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே நகரில் சசூன்ஸ் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டு திறக்கப்பட்டது. இந்த விழாவில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கலந்துகொண்டார். விழா மேடையில் பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் விரக்தியடைந்து மேடையில் இருந்து கீழே இறங்கியபோது பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே, தடுமாறினார்.

அப்போது கோபமடைந்த அவர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். தொடர்ந்து பாஜக எம்எல்ஏ அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பான வீடியோவும் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, காவலரை அறைந்த பாஜக எம்எல்ஏக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கண்டனங்கள் வலுத்ததை அடுத்து, பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்லே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்மீது சட்டப்பிரிவு 353-ன் கீழ் புனேவில் உள்ள பண்ட்கார்டன் காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே ஏற்கனவே பெண் ஊழியரை துன்புறுத்தி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 வழங்கும் தேதி அறிவிப்பு..!! கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்..? தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Sat Jan 6 , 2024
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட குடும்ப […]

You May Like