fbpx

”இன்னைக்கு ஆட்டம் சூடுபிடிக்கப் போகுது”..!! பதிலடி கொடுக்குமா.? பறிகொடுக்குமா.? என்ன செய்யப்போகிறது இந்தியா.?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு லக்னோவில் தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதனால், தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் தொடங்குகிறது.

முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால், இந்த முறை அதற்கு பதிலடி தரும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ், கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். மற்ற வீரர்கள் சொதப்பலாக ‘பேட்’ செய்து ஏமாற்றம் அளித்தனர். இன்றைய போட்டியில் இந்திய அணி தோற்றால் தொடரை இழப்பதுடன், டி20 போட்டி தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் இழக்க வேண்டியது வரும். எனவே, இந்திய அணியினர் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரைத் தக்கவைக்க கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Chella

Next Post

’பிகினி உடையில் சன் பாத்’..!! கோவா சென்றால் இதை மட்டும் செய்யாதீங்க..!! வெளியான புதிய அறிவிப்புகள்..!!

Sun Jan 29 , 2023
கோவாவில் வெளிநாடு சுற்றுலா பயணிகளின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுக்க கோவா சுற்றுலாத்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், விபத்துகளை தவிர்ப்பதற்காக செங்குத்தான பாறைகள் மற்றும் கடல் பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களில் மக்கள் செல்ஃபி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும் போது அல்லது பிகினி உடையோடு சன் பாத் செய்யும் போது அவர்களின் அனுமதியின்றி புகைப்படங்களோ, செல்ஃபியா எடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
’பிகினி உடையில் சன் பாத்’..!! கோவா சென்றால் இதை மட்டும் செய்யாதீங்க..!! வெளியான புதிய அறிவிப்புகள்..!!

You May Like