fbpx

இன்று பூமியை தாக்க உள்ள புவி காந்தப் புயல்… இந்த பாதிப்பு ஏற்படலாம்..

சூரியனின் மேற்பரப்பில் உள்ள துளையிலிருந்து வெளியேறும் அதிவேக சூரியக் காற்று இன்று (ஆகஸ்ட் 3) பூமியில் சிறிய அளவிலான புவி காந்தப் புயல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள தெற்கு துளையிலிருந்து இந்த சூரிய காற்று வெளியேறுவதால், இந்த காந்த புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சூரியனின் வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிப்பு ஏற்பட்டதை பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்கள் கண்டுபிடித்தன.. இது இந்த சூரிய கதிர்களுடன் இணைந்தால் புவி காந்தப் புயலை ஏற்படுத்தக்கூடும். இந்த புயல்கள் அரோரா காட்சிகளை உருவாக்கலாம், ஏனெனில் அவை பூமியின் காந்தப்புலத்தை மிகவும் ஆற்றல் வாய்ந்த துகள்களின் அலைகளால் சிறிது சுருக்கப்படுவதற்கு காரணமாகின்றன.

இந்த துகள்கள் துருவங்களுக்கு நெருக்கமான காந்தப்புலக் கோடுகளில் பயணிக்கும்போது வளிமண்டல மூலக்கூறுகளை சீர்குலைத்து, பிரகாசமான அரோராக்களை உருவாக்க ஆற்றலை ஒளியாக வெளியிடுகின்றன. ஆனால் அவை புலம்பெயர்ந்த விலங்குகளையும் பாதிக்கலாம்.. மேலும் சிறிய செயற்கைக்கோள் செயல்பாடுகளை சீர்குலைப்பதுடன், மின்சார அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

Maha

Next Post

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா..! ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் சூர்யகுமார் யாதவ்..!

Wed Aug 3 , 2022
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா, 5 டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டி20 ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய […]
ஐசிசி டி20 கிரிக்கெட்..! தரவரிசைப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறினார் சூர்யகுமார் யாதவ்..!

You May Like