திண்டுக்கல் மாவட்ட பகுதியில் செங்குளத்துப்பட்டியில் 4 வயது சிறுமி சூடு வைத்து துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் பெயரில் புகார் மேற்கொள்ளபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சிறுமியை வளர்த்த ராஜேஷ் குமார் மற்றும் கீர்த்திகா என்ற தம்பதியிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை பெரும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது .
பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை உட்படுத்த பட்டுள்ளார் என்பதும், அதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது .
இதனையடுத்து ராஜேஷ் குமாரிடம் விசாரணை செய்ததில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் , அவரது மனைவியும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் எனவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கை போக்சோ வழக்காக மாற்றி ராஜேஷ்குமார் மற்றும் கீர்த்திகாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.