fbpx

டியூசன் சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம்..!! அரை நிர்வாண நிலையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு..!!

மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினஜ்பூர் மாவட்டம் கலியகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி கடந்த வியாழக்கிழமை டியூசன் சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிறுமியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே, நேற்று கலியகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் இருந்து துணிகள் கிழிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த ஜாவித் அக்தர் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்ததாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 2 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை பிரேத பரிசோதனைக்கு உடலை தரமாட்டோம் என சிறுமியின் குடும்பத்தினர், பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை போலீசார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

Chella

Next Post

பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற 14 பேர் வெயிலால் பலியான சம்பவம்…..! உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருந்தால் முதல்வர் மீது புகார் வழங்குங்கள் எம்பி வேண்டுகோள்…..!

Sun Apr 23 , 2023
தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில், நாடு முழுவதும் கோடையின் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, பல சமயங்களில் குழந்தைகள், முதியவர்கள் என்று பலரும் தங்களுடைய உயிரையும் இழக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. தமிழக முத்தட பல்வேறு மாநில அரசுகள் வெயில் சமயத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்திய வண்ணம் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் கர்நாடக மாநிலத்தில் தேர்தலும் மிக […]

You May Like