ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் துர்கா பூஜைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 2 சிறுமிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இரண்டு சிறுமிகள் சரய்தியில் நடந்த துர்கா பூஜை கண்காட்சியில் கலந்துகொண்ட பின்னர் வீடு திரும்பியபோது, 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், நீண்ட நேரம் போராடி அந்த சிறுமிகள் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு வந்தனர். இதையடுத்து, நடந்தவற்றை குடும்பத்தினரிடம் கூறியபோது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆரம்பத்தில், பஞ்சாயத்து அளவில் இப்பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சிறுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய சதர்பூர் துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி அவத் யாதவ், ”புகாரைப் பெற்ற பிறகு விசாரணை தொடங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில், கிராமத் தலைவரின் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்” என்று கூறினார்.
Read More : கேஸ் சிலிண்டர் வைத்திருப்போருக்கு சிக்கல்..!! உடனே ஸ்டாக் வாங்கி வெச்சிக்கோங்க..!!