நடிகர் பிரபுதேவாவின் பிறந்த நாள் அன்று கோட் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகளுக்கு ட்ரீட் கொடுத்த படக்குழு
விஜய் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இந்தப் படம், விஜய் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
யுவன் இசையில் சீக்கிரமே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இதனிடையே சர்ப்ரைஸ்ஸாக வெங்கட் பிரபு வெளியிட்ட போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. இன்று பிரபுதேவா தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தப் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அந்தப் போஸ்டரில் பிரபுதேவா கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார். அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் படத்தில் விஜய் மட்டும்தான் மாஸா இருப்பார் என்று பார்த்தால் பிரபுதேவாவும் செம மாஸாக இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபுதேவா, ஏற்கனவே விஜய்யுடன் பலமுறை கூட்டணி வைத்துள்ளார். விஜய்யின் பாடல்களுக்கு கோரியோகிராபி செய்தது மட்டுமில்லாமல், போக்கிரி, வில்லு ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இதனைத் தொடந்து தற்போது கோட் படத்தில் விஜய்யின் கேங்கில் ஒருவராக மாஸ் காட்டவுள்ளார்.
இந்த போஸ்டரில் பிரபுதேவாவின் லுக் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. இருப்பினும் அவருடன் விஜய் இல்லாததால் தளபதியின் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் உள்ளனர்.