fbpx

’முருகனின் காலடியில் தங்க மகள் ஐக்கியமாகியிருப்பார்’..!! பவதாரிணியின் மறைவை கேட்டு கதறி அழுத வடிவேலு..!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணியின் மறைவு செய்தியை அறிந்து கதறி அழுதுவிட்டேன் என நடிகர் வடிவேலு ஆடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் மகளும் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் திறம் பட செயலாற்றியவர். இந்நிலையில், புற்றுநோய் பாதிப்புக் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை பெற்று வந்த அவர், இலங்கையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், நடிகர் வடிவேலு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,” ‘மாரிசன்’ படத்திலிருந்து இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே இந்த அதிர்ச்சியான செய்தி என்னை அப்படியே நிலைகுலையச் செய்து விட்டது. அண்ணன் இசைஞானி அவருடைய தங்க மகள் பவதாரிணி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு ஒன்னும் புரியல. 47 வயசு பொண்ணு இவ்வளவு சீக்கிரமா கடவுள் கிட்ட போயிடுச்சே என கதறி அழுதுவிட்டேன்.

பவதாரிணி ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். அவருடைய மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் பூராவுமே இன்னைக்கு ரொம்ப நொறுங்கி இருப்பாங்க. தைப்பூச நாளில் தங்கை பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் ஐக்கியமாகியிருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். இளையராஜா அண்ணன் மனம் தைரியமாக இருக்க என்னுடைய குலதெய்வம் அய்யனார், கருப்புசாமி என எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறேன். இதுக்கு மேல என்னால பேச முடியலை” என அழுதபடி அவர் சேனல் ஒன்றுக்கு ஆடியோ பேட்டியளித்துள்ளார்.

Chella

Next Post

கொலஸ்ட்ராலை குறைக்கும் Oreo பிஸ்கட்ஸ்!… ஸ்டேடின் மருந்தை விட 2 மடங்கு பயன்!… ஆய்வில் தகவல்!

Fri Jan 26 , 2024
Oreo குக்கீகள் அதிக தீவிரம் கொண்ட ஸ்டேடின் மருந்துகளுடன் ஒப்பிடும்போது எல்டிஎல் கொழுப்பை (எல்டிஎல்-சி) குறைப்பதில் இரண்டு மடங்கு பயனுள்ளதாக இருக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் நிக்கோலஸ் நார்விட்ஸ், ஓரியோஸைத் தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளார். அமெரிக்காவில் 16 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வில், பங்கேற்பாளரின் உணவில் தினமும் 12 ஓரியோ குக்கீகளை இணைத்து கூடுதலாக 100 […]

You May Like