fbpx

எல்லாரும் கவனம்… 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 26-ம் தேதி முதல்…! ஆன்லைன் மூலம் மட்டுமே… அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!

11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை ஜூலை 26-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வினை எழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை ஜூலை 26 ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்முறைத் தேர்வு குறித்த விவரங்களை தனித்தேர்வர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்.11-ம் வகுப்பு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூலை 26 ஆம் தேதி வெளியீடு!

Vignesh

Next Post

வாகன ஓட்டிகளே கவனம்... இதை அணியாமல் சென்றால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்...! இது வரை 2,405 நபர்களுக்கு விதிப்பு

Sat Jul 23 , 2022
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை முகக்கவசம் அணியாத 2,405 நபர்களுக்கு ரூ.12,02,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாத […]
இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள்..! எச்சரிக்கும் காவல்துறை..! பெற்றோர்களே உஷார்

You May Like