fbpx

#TnGovt: 11-ம் வகுப்பு மாணவர்களே… நாளை முதல் ஆன்லைன் மூலம் HallTicket பதிவிறக்கம் செய்யலாம்…! அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!

11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வினை எழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை ஜூலை 26 ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்முறைத் தேர்வு குறித்த விவரங்களை தனித்தேர்வர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்.11-ம் வகுப்பு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

அதே போல 12-ம் வகுப்பு மாணவர்கள் ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வெழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்.12-ம் வகுப்பு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் .

Also Read: பயங்கர அலெர்ட்… டெல்லியை தொடர்ந்து… தெலுங்கானா மாநிலத்தில் 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை காய்ச்சல் உறுதி….!

Vignesh

Next Post

TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 27-ம் தேதிகுள் இதை செய்து முடிக்க வேண்டும்...! இல்லை என்றால் தேர்வு எழுதுவதில் சிக்கல்...!

Mon Jul 25 , 2022
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தில் 27 ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2202 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் ஏப்ரல் 26-ம் தேதி வரையில் விண்ணப்பித்தனர். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு […]

You May Like