fbpx

12-ம் வகுப்பு மாணவர்களே துணைத்தேர்வுக்கு… ஆன்லைன் மூலம் இன்று முதல் Hall Ticket…! எப்படி டவுன்லோட் செய்வது…?

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வெழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது ஹால்டிக்கெட்டைஇன்று மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்.12-ம் வகுப்பு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Also Read: ஜூலை 18 முதல் அமலுக்கு வந்த பேக் செய்யப்பட்டு பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் எவை…?

Vignesh

Next Post

தமிழகமே... இதற்கான செலவின தொகை ரூ.1,000 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி அறிவிப்பு...! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை...!

Wed Jul 20 , 2022
கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கு செலவின வரம்பினை ரூ.1,000 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது;  கிராம சபையினை நடத்த, கிராம ஊராட்சியின் அனுமதியின்படி, ஊராட்சி நிதியிலிருந்து, அதிகபட்சமாக ரூ.1000 செலவு செய்ய கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதியிருந்தது. 2022-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணை […]

You May Like