fbpx

மாணவர்களே கவனம்… விடைத்தாள் நகலினை ஆன்லைன் மூலம் பெறலாம்…! தேர்வுத்துறை மிக முக்கிய அறிவிப்பு…!

12-ம் வகுப்பு துணைத் தேர்வின் விடைத்தாள் நகலினை இனையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து நாளை முதல் 10-ம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

#Tnpsc: போட்டித் தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு.‌..! வரும் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

Wed Sep 7 , 2022
போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அண்மையில் நடைபெற்ற TNPSC Group IV எழுத்துத் தேர்வுக்கு இப்பயிற்சி மையங்களால் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய […]

You May Like