நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மூலப்பள்ளிபட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(63) கூலி வேலை செய்து வருகிறார். பெரியசாமி தனது வீட்டின் அருகாமையில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் பெரியசாமி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி பெரியசாமி கீழே விழுந்தால் கால்களில் பலத்த காயங்களுடன் உயிர்த்தபினார்.
அருகில் இருந்த பொதுமக்கள் பெரியசாமியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கும் பிரிவில் பணியாற்றும் ஊழியர் தொடர் விடுமுறையில் உள்ளதால் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பெரியசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
ஆனால் தனக்கு கால்களில் அதிக வலி ஏற்படுவதாக பெரியசாமி கதறியதால் உறவினர்கள் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ராசிபுரம் அரசு மருத்துவமனை பெரியசாமி கால்களில் உள்ள கண்ணாடி துகள்களை முறையாக அகற்றாமல் காயம்பட்ட இடத்தில் இருக்கமாக கட்டுப்போட்டு அப்படியே அனுப்பி வைத்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. அதன்பிறகு தனியார் மருத்துவமனையில் பெரியசாமியின் காயம் lபட்ட இடத்தில் இருந்து கண்ணாடி துகள்களை எடுத்தனர், இந்த காண்ணாடி துகள்களை எடுக்கும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் அரசு மருத்துவமனை பணியில் இருந்த மருத்துவரிடம் கேட்டபோது, மருத்துவமனையில் எக்ஸ்-ரே ஸ்கேன் செய்யும் பணியாளர் விடுமுறையில் உள்ளதால் தற்போது ஸ்கேன் செய்ய முடியாமல் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறினார். ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் இதுபோல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். விபத்துக்குள்ளாகி 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர அவசரமாக வலியோடு வந்த முதியவருக்கு முதல் சிகிச்சை கூட அளிக்காமல் இருப்பது அரசு மருத்துவமனை தரத்தின் நம்பிக்கையை உடைக்கிறது.