fbpx

வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை…! MP கனிமொழி காட்டம்…

திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை.

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “#திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலத்தால் அழிக்க இயலாத அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தப் புனித நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என காவி நிறத்தில் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை பதிவிட்டு தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் உருவப்படத்தைப் பகிர்ந்து, அவரை சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என்று குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் கருத்தைப் பகிர்ந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கு பதில் கொடுத்துள்ள திமுக எம்பி கனிமொழி; திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. வள்ளுவரின் நிறம் மனிதநேயம் தான், வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம் என திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சென்னையில் வாழும் வெளியூர் மக்களே..!! இந்த தவறை செய்து ரூ.7,000-ஐ இழந்துவிட்டீர்களே..!! இனியாவது கவனமா இருங்க..!!

Tue Jan 16 , 2024
ஒரே ஒரு சிறிய தவறால் 6,000 வெள்ள நிவாரணமும், பொங்கல் பரிசு ஆயிரமும் கிடைக்கவில்லை. சொந்த ஊரை விட்டு சென்னை வந்து வாழும் மக்களின் அவஸ்தையை நீங்களே பாருங்க. வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வசித்து வருவோர், அப்படி என்ன தவறு செய்தார்கள் என்பதை பார்ப்போம். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் டிசம்பர் 3, 4 ஆகிய நாட்களில் பெய்த கனமழையால் […]

You May Like