டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர்.
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என கூறி திருப்பி அனுப்பினார். நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தமிழக அரசிடம் ஆளுநர் ரவி கேட்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபும், தலைமைச் செயலாளராக இறையன்பு இருவரையும் திமுக அரசு நியமனம் செய்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஜிபியாக பதவியை வகித்து வந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் மாதத்துடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர், மாணவர்களுக்கு இலவச பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். அவரது பெயர் டிஎன்பிஎஸ்சி தலைவர் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் தான் ஆளுநர் அவரது நியமனத்தை நிராகரித்து விளக்கம் கேட்டுள்ளார்.