fbpx

ஊர்வலத்தின் போதே உல்லாசத்திற்கு ஆசைப்பட்ட மாப்பிள்ளை..!! மணமேடையில் வைத்து சம்பவம் செய்த மணப்பெண்..!!

திருமண வீடு என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்பது நம் கலாச்சாரத்தில் உள்ளது. ஆனால், தற்போது மேற்கத்திய கலாச்சாரம் பரவி திருமணம் கொண்டாட்டடம் என்றாலும் அதன்போக்கு மாறிவிட்டது. இதனால், சின்னச் சின்ன காரணங்களுக்காக கூட திருமணங்கள் நின்று போகும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதாவது கொண்டாட்டத்தின் போது ஏற்படும் சலசலப்புகளும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து திருமணங்கள் நின்று விடுகின்றன. அந்த வகையில், மாப்பிள்ளையின் அடாவடியால் தற்போது ஒரு திருமணம் நின்றதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் மாணிக்பூரில் இளம் தம்பதியின் திருமண விழாவிற்கான ஏற்பாடு தடபுடலாக நடைபெற்றது. மணமக்கள் ஊர்வலமாக திருமண மண்டபத்தை வந்தடைந்தனர். திருமணத்திற்கு வந்த மணமகள் வீட்டாரை மணமகன் வீட்டார் உற்சாகமாக வரவேற்று இரவு விருந்து அளித்தனர். மணமக்கள் ஊர்வலத்தின் போதே காரில் அமர்ந்திருந்த போது, போதையில் மணமகன் மணமகளிடம் ஆபாசமான சேட்டைகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் மணமகனை மேடைக்கு வருமாறு புரோகிதர் அழைத்துள்ளார். அப்போது தள்ளாடியபடியே மணமேடைக்கு மணமகன் வந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடிபோதையில் இருந்த மணமகனிடம், மணமகள் நெற்றியில் குங்குமத்தை வைக்க புரோகிதர் சொல்லியுள்ளார்.

ஆனால், போதையில் இருந்த மணமகன், கைநிறைய குங்குமத்தை அள்ளி மணமகளின் முகம் முழுவதும் அப்பியுள்ளார். இதைத் தடுத்த மணமகளையும் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மணமகள் பெற்றோரும், திருமணத்திற்கு வந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மணமகள் உடனடியாக மணமேடையில் இருந்த எழுந்து திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதை ஏற்றுக் கொள்ளாத மணமகன் வீட்டார், மணமகள் குடும்பத்தினரை திருமண மண்டபத்தில் சிறைபிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இரு தரப்பினரும் திருமணத்தை நிறுத்த ஒப்புக் கொண்டனர். மேலும், திருமணத்திற்கான செலவுகளை வழங்க மணமகன் வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். இதனால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

Chella

Next Post

பெங்களூருவில் பதுங்கி இருந்த சென்னையை சேர்ந்த 2 ரவுடிகள்……! காவல்துறையினர் அதிரடி கைது……!

Tue May 9 , 2023
சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் யுவராஜ் என்ற எலி யுவராஜ் (38) ஈஷா என்கின்ற ஈஸ்வரன் (33) இருவரும் ரவுடிகளாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. அதோடு இவர்கள் மீது கொலை, போதை பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு வடசென்னை பகுதியில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருக்கின்ற செட்டுகளில் மாமுல் வசூலிப்பது போன்ற குற்ற […]
கேரளாவில் மீண்டும் ஒரு பயங்கரம்..!! சிறார்களை வைத்து நரபலி பூஜை..?? சிக்கிய பெண் சாமியார்..!!

You May Like