fbpx

கள்ளக்காதலி வீட்டில் பதுங்கியிருந்த காவலர்..!! வீடு புகுந்து தூக்கிய மனைவி..!! பரபரப்பு சம்பவம்..!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வாசு. இவருக்கும் சாம்ராஜியம் என்பவருக்கும் திருமணமாகி, திருமண வயதில் மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக சாம்ராஜியத்தை கைவிட்ட வாசு, மௌனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நெல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காவல் ஆய்வாளர் வாசு ரகசிய தொடர்பில் இருப்பது சாம்ராஜ்யத்திற்கு தெரியவந்தது. ஏற்கனவே 2-வது திருமணம் செய்த கோபத்தில் இருந்தவருக்கு, கள்ளத்தொடர்பு சமாச்சாரமும் தெரிந்ததால் கொந்தளித்த அவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து அப்பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு இருவரையும் பிடித்து வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். பின்னர், அங்கிருந்த காவலர் வாசு மற்றும் அவரது மனைவியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் கவனத்திற்கு..!! இன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும்..!! அதிரடி உத்தரவு..!!

Mon Apr 10 , 2023
தமிழ்நாடு முழுவதும் நடப்பு ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே, ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகளை நடத்தி முடித்து ஏப்ரல் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள […]

You May Like