fbpx

3 நாட்களுக்கு வெயில் கொளுத்தப் போகுது..!! குழந்தைகள், முதியவர்கள் உஷார்..!! எச்சரித்த வானிலை ஆய்வு மையம்..!!

அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், வரும் 23, 24ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்சம் 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

Read More : கண்ணீரில் காசா..!! இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 342ஆக உயர்வு..!! உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நுழைய தடை..!!

English Summary

Temperatures are forecast to increase by 2 – 3 degrees Celsius above normal for the next 3 days.

Chella

Next Post

RBI உடன் கைக்கோர்க்கும் மொரீஷியஸ் வங்கி.. உள்ளூர் நாணயங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க ஒப்பந்தம்..!!

Tue Mar 18 , 2025
RBI and Bank of Mauritius sign pact on use of local currencies for bilateral transactions

You May Like