fbpx

பெண்களே உஷார்.. பால் குடிப்பதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்..!! – ஆய்வில் தகவல்

தினசரி பால் குடுப்பது இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் பெண்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆண்களின் உடல்கள் சர்க்கரையை நன்றாக ஜீரணிப்பதால் எந்தவொரு பாதிப்பும் ஆண்களுக்கு ஏற்படுவதில்லை என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்த ஆய்வை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் பாலில் உள்ள லாக்டோஸ் உடலில் என்ன மாற்றத்தைச் செய்கிறது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளனர். அதில் தான் லாக்டோஸ் செல் சேதத்தை ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும், இது உங்கள் இதயத்தை வேகமாக முதிர்ச்சியடையச் செய்வதாகவும் இதயத்திற்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 400 மில்லி பால் குடிப்பது இதய நோய் அபாயத்தை 12% வரை அதிகரிக்கும். பாலின் கொழுப்பு உள்ளடக்கத்தைப் பொருட்படுத்தாமல் இந்த உயர்ந்த ஆபத்து பொருந்தும் என்றும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, அதாவது கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது முழு கொழுப்பு பதிப்புகள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. குறைவாக மது அருந்துபவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன், “இதய நோய்களைத் தடுப்பதற்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு 300மிலி மேல் பால் எடுத்துக் கொள்வது இஸ்கிமிக் இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை அதிகரிக்கிறது. இந்த பாதிப்பு பெண்களுக்குத் தான் ஏற்படுகிறது. ஆண்களுக்கு இல்லை” என்றார்.

பெரும்பாலும் கால்சியம் சத்து உடலுக்குத் தேவை என்பதாலேயே பலரும் பாலை குடிப்பார்கள். உடலில் உள்ள எலும்பு வலுவாக இருக்க இந்த கால்சியம் சத்து முக்கியமாகும். கால்சியம் சத்து வேண்டும் எனக் கருதுவோர் பாலுக்குப் பதிலாகத் தயிர் அல்லது மோரை எடுத்துக் கொள்ளலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பால் தயிராகும் நொதித்தல் செயல்முறை பாலின் லாக்டோஸில் உடைக்கப்படுகிறது. எனவே தான் தயிர், மோர் உடலின் ரத்த அழுத்த அளவையும் குறைத்து இதய நோய்க்கான ஆபத்துகளையும் குறைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Read more ; கர்பமாக்கிவிட்டு காணாமல் போன காதலன்; குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..

Next Post

'Pushpa 2 The Rule' படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு..!! தெறிக்க விடும் அல்லு அர்ஜூன்..

Sun Nov 17 , 2024
'Pushpa 2 The Rule' teaser trailer released

You May Like