சென்னை உயர்நீதிமன்றம் இன்று இரவு அனைத்து வாயில்களும் பூட்டப்படுகின்றது. ஏன் என்பதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம். பாரம்பரிய கட்டிடமான உயர்நீதிமன்றம் தனது பழைமை மாறாமல் கம்பீரமாக நிற்கின்றது. உயர்நீதிமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டியதால், அதற்கு மரியாதை செய்யும் வகையில் இன்று ஒரு நாள் இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மூடப்படுகின்றது.
பல ஆண்டுகளாக இந்த சம்பிரதாயம் பின்பற்றப்பட்டு வருகின்றது. எனவே சனிக்கிழமை இரவு (இன்று) 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 8 மணி வரை இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது.
இது தொடர்பான அறிவிப்பை உயர்நீதிமன்ற பதிவாளர் பி.ஹரி வெளியிட்டுள்ளார். அதில் நுழைவாயில்கள் அனைத்தும் மூப்பட்டு இருக்கும் போது பொதுமக்கள், வக்கீல்கள் என யாருக்கும் நீதிமன்றத்திற்குள் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.