நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர், சர்க்கார் தோப்பு பகுதியில் வசிக்கும் டிரைவர் அருள்மணி (30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி (26) என்பவரை சில வருடங்களுக்கு முன் காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நித்ரன் (5), அகிலன் (3) என்ற இருமகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஜோதிலட்சுமி குடும்ப பிரச்னைக் காரணமாக அதே பகுதியில் இருக்கும் அவரது தனது தாய் ஜானகி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதுபற்றி அருள்மணி விசாரித்த போது, மனைவி ஜோதிலட்சுமிக்கும் அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பருக்கும் இடையே கள்ளதொடர்பு இருந்தது அருள்மணிக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அருள்மணி அவரது மனைவி ஜோதிலட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்னை பெரிதான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜோதிலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை தொடர்ந்து அருள்மணி மாமியார் வீட்டிற்குச் போய் மாமியார் மற்றும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில், மகளின் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த அருள்மணியை கொலை செய்ய முடிவெடுத்த ஜானகி, மகளின் கள்ளக்காதலன் மணிகண்டனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, குடித்துவிட்டு போதையில் இருந்த அருள்மணியை, மணிகண்டன் மற்றும் அவரது நண்பன் லோகேஸ்வரன் (23) ஆகியோர் அருகே இருக்கும் ஏரிக்கு அழைத்துச் சென்று கற்கள் மற்றும் மது பாட்டிலால் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனால், சம்பவ இடத்திலேயே அருள்மணி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி, மணிகண்டன், லோகேஸ்வரன், ஜானகி ஆகியோரை கைது செய்தனர். மகளின் கள்ளகாதலுக்கு மருமகன் தடையாக இருந்ததால் மாமியாரே கொலை செய்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.