தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள அண்ணா நகர் தெருவில் ஆண்டனி ராஜ் மற்றும் இவரது காதல் மனைவி மாதவியுடன் வசித்து வருகிறார். மேலும், ஆண்டனி ராஜ் மதுபோதைக்கு மிகவும் அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இன்று மதியம் ஆண்டனி ராஜ் அண்ணா நகரில் சென்று கொண்டிருந்த தனது மனைவியை வழிமறித்து அவர் கழுத்தை ஆக்ஸா பிளேடு கொண்டு அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனால், மாதவி கூச்சலிடவே அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதனை தொடர்ந்து, பொதுமக்கள் பலத்த காயமடைந்த அவரை காப்பாற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி கணவரை தேடுகின்றனர்.