திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ரெங்களாதபுரம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் (24) என்பவரும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வள்ளி என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில், 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தினேஷ், சென்னையில் வாடகை கார் ஓட்டி வந்தார். அப்போது, சௌந்தர்யா என்ற பெண்ணுடன் தினேஷுக்கு தொடர்பு ஏற்பட்டு, அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயம் முதல் மனைவிக்கு தெரியாது. இப்போது சௌந்தர்யாவுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் இருந்து பெரம்பலூர் வந்த தினேஷ், மினி பஸ் ஒன்றில் நடத்துனராக பணியாற்றி வந்த நிலையில், அதில் பயணம் செய்த மாணவி ரம்யாவை காதலித்து 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் நடைபெற்றது. புது மனைவி ரம்யா மீதுள்ள காதலால், தங்களது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து, My pondatti I Love you dee Chellam என பதிவிட்டுள்ளார் தினேஷ். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 2-வது மனைவி சௌந்தர்யா, உடனே தினேஷுக்கு ஃபோன் போட்டு விசாரித்துள்ளார்.
மேலும், தான் போலீசுக்கு போவதாக சௌந்தர்யா மிரட்டியதால், பயந்துபோன தினேஷ் ஃபோனை கட் செய்துவிட்டு தலைமறைவானார். பிறகு செளந்தர்யா, தினேஷின் 3-வது மனைவி ரம்யாவை தேடிச்சென்றுபார்த்த போது தான் தினேஷ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதை ரம்யா உணர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதில், “என்னை திருமணம் செய்து, 3 வயதில் குழந்தை உள்ளபோது, கணவர் தினேஷ் வேறு 2 பெண்களை திருமணம் செய்துள்ளார். மேலும், என்னிடம் விவாகரத்து கேட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்“ என சௌந்தர்யா புகாரளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த தினேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த 3 பெண்களையும் தினேஷ் திருமணம் செய்து ஏமாற்றியதுடன், பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியுள்ளார். எனவே, தினேஷால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் சென்னையில் தினேஷ் திருமணம் செய்த வள்ளிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாம். தினேஷின் 3-வது மனைவி ரம்யா, தினேஷுக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கிறார்கள் எனக்கூறியும் விடவில்லையாம். அவருடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்து வருகிறார். இதனால், ரம்யாவின் பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
Read More : மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு..? மருத்துவமனைக்கு விரைவில் CM ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி..!!