fbpx

#Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டத்தில் மட்டும்…! வானிலை மையம் சொல்லிய தகவல்…!

தமிழகத்தில் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8,9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 9-ம் தேதி வரை இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

2 அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு...

Wed Jul 6 , 2022
பிரிட்டனில் 2 மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தததால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.. பிரிட்டன் நாடாளுமன்ற எம்பி கிறிஸ் பிஞ்சர், ஒரு தனியார் கிளப்பில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.. இதற்கு மத்திய கிறிஸ் பிஞ்சர் துணை தலைமைக் கொறடா பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எம்.பி பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.. ஆனால் பிஞ்சர் குறித்து பேசிய போரிஸ் ஜான்சன் […]

You May Like