கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை விளம்பரம் செய்து வருகிறன்றன. அந்த வகையில் ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்கி வரும் 18ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் எலக்டிரிக் கார்களை அதிக அளவில் காட்சிப்படுத்தி உள்ளன.
ஹூண்டாய் ஐயோனிக் -5 : ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் ஐயோனிக் -5 காரின் விலை ரூ.44 லட்சத்து 95 ஆயிரம் என அறிவித்தது. ஏற்கனவே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது E-GMP பிளாட்பார்மில் உருவான முதல் கார் ஐயோனிக் 5 இந்தியா வந்துள்ளது. இதே பிளாட்பார்மில் தான் கியா EV6 மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் காருக்கு முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் முதல் 500 கார்களுக்கு மட்டும் இந்த விலை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 217 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா’ மின்சார காருக்கு அடுத்தபடியாக, இந்திய சந்தையில் ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டுவந்துள்ள 2-வது மின்சார கார் ஐயோனிக் -5 ஆகும்.