fbpx

’அடையாளமே தெரியல’..!! நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அதிபரின் உடல் மீட்பு..!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்திருந்தனர். விழாவை முடித்துவிட்டு திரும்பி செல்லும்போது ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், யார் யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடல் அடையாளம் காணப்பட்ட பிறகு தான் நேரடியாக இறுதிச் சடங்குக்கு கொண்டு செல்லப்படும். பிறகு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி  உடல்  ஈரான் நாட்டின் தலைநகரமும் தெகுரான் மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும் முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More : ஈரான் அதிபரின் மரணம் கொலையா..? அடுத்து என்ன நடக்கும்..? கொண்டாடும் அமெரிக்கா, இஸ்ரேல்..?

Chella

Next Post

"கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவு" ஆய்வுக்கு ஒப்புதல் பெறவில்லை – ICMR விளக்கம்!

Mon May 20 , 2024
கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகம் நடத்திய ஆய்வுக்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. கோவாக்ஸின் தடுப்பூசியை இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கி வந்தது. இந்தத் தடுப்பூசி போட்டவர்களுக்கு சில உடல்நல பாதிப்புகள் வரலாம் என பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் கடந்த ஓராண்டாக நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, “ஆய்வில் பங்கேற்ற 926 பேரில் கிட்டத்தட்ட 50 […]

You May Like