fbpx

2017இல் நடந்த சம்பவம்..!! விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்க இதுதான் காரணம்..!! பிரேமலதா அதிர்ச்சி தகவல்..!!

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இன்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”அரசியலில் பெண்கள் இருப்பது சவாலான விஷயம். ஜெயலலிதா அந்த சவால்களை சந்தித்து வெற்றி பெற்றவர். கடந்த 2005இல் தொடங்கப்பட்ட தேமுதிக, மக்களுடனும் ஆண்டவனுடனும்தான் கூட்டணி என்று கூறி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. 2011 வரைக்கும் தமிழக அரசியலில் தனித்தே கோலோச்சியது தேமுதிக.

விஜயகாந்த் கடந்த 2016 வரைக்கும் உடல்நலத்துடன்தான் இருந்தார். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 2017 முதலே அவரது உடல்நலம் படிப்படியாக பாதிக்கப்பட்டது. பேச்சு குறைந்து போனது செயல்பாடுகள் படிப்படியாக முடங்கி விட்டது. 70 வயதாகும் விஜயகாந்த் தற்போது சர்க்கர நாற்காலியில் வரும் அளவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட காரணம் நம்பிக்கை துரோகம் தான். தன்னை சுற்றியிருந்தவர்களை அதிகம் நம்புவார் விஜயகாந்த். நம்பியவர்கள் செய்த துரோகம்தான் உடல் நலம் பாதிக்க காரணம்” என்றார்.

Chella

Next Post

டெஸ்ட் கிரிக்கெட்..!! வரலாற்று வெற்றி பெற்ற இந்திய மகளிரணி..!!

Sat Dec 16 , 2023
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிரணி வரலாற்று வெற்றி படைத்துள்ளது. நவி மும்பையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்ஸ் 428 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, நிலையில்லாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து இங்கிலாந்து 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2-வது இன்னிங்ஸில் இந்தியா 186/6-க்கு […]

You May Like