fbpx

தமிழ்நாட்டில் பெரும் புயலை கிளப்பிய சம்பவம்..!! சிசிடிவி காட்சிகள்..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகளில் விசாரணைக்காக வருபவர்களிடம் விசாரணை நடத்தும்போது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லைப் பிடுங்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். மேலும், இந்த குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்குப்பதிவு செய்து, சட்ட விரோத காவலில் வைத்த காவல்துறையினர், தன்னை கடுமையாக தாக்கினர். அப்போது தன்னுடைய 4 நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. இதில் தான் மட்டுமின்றி விசாரணை கைதிகள் சிலரது பற்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்ரவதை செய்தார் என கூறினார்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10ஆம் தேதி சிசிடிவியில் பதிவான காட்சிகளை தனக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக
உயர்மட்ட குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை தனக்கு வழங்க கோரி அருண்குமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜரானார்.

தமிழ்நாடு அரசின் சிறப்பு விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் அதிகாரியின் விசாரணை அறிக்கை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மேலும், சிசிடிவி சம்பந்தமான அறிக்கை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹென்றி, இந்த வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட்டில் அமுதா ஐஏஎஸ் அறிக்கை தருவதாக ஏற்கனவே அரசு தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி இளங்கோவன் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரர் வசம் கொடுக்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் சிசிடிவி காட்சிகள் வழங்க வேண்டும் என்ற மனுவில் உரிய உத்தரவு வழங்குவதாக கூறி வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

Chella

Next Post

முக்கிய செய்தி: மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்ட "இஸ்லாமிய மாணவர் அமைப்பு.." - உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

Mon Jan 29 , 2024
சிமி இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்து மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் என்று அழைக்கப்படும் சிமி 1977 ஆம் ஆண்டு உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் நகரில் தோற்றுவிக்கப்பட்டது. இஸ்லாமிய மாணவர் இயக்கமாக கருதப்பட்ட இந்த அமைப்பு தீவிர மத கொள்கைகள் மற்றும் அடிப்படை வாதத்தை பின்பற்றுவதாக கூறி 2001 ஆம் வருடம் இந்திய அரசாங்கத்தால் தடை […]

You May Like