தமிழ்நாட்டின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் அபிராமி திரையரங்க உரிமையாளருமான, அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அபிராமி ராமநாதன் திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமின்றி தொழிலதிபரும் ஆவார். அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான அலுவலகங்களில் மாலை 4 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அபிராமி ராமநாதனின் மேலாளர் மோகன் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.