fbpx

இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..!! – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.12-20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு என்பதால் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது; 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அது மேலும் வலுவடைந்து புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதால், மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்ட மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read more ; இந்த ராசியினருக்கும், காதலுக்கும் செட்டே ஆகாது…. நீங்க எந்த ராசி?

English Summary

The Indian Meteorological Department has announced that an orange alert has been issued for Tamil Nadu for three days from today

Next Post

ஒருவழியாக 7 நாளுக்கு பின் குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.800 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..

Mon Nov 25 , 2024
In Chennai today, the price of gold rose by Rs.600 to Rs.58,400

You May Like