கர்நாடகாவில் நாள்தோறும் 14 மணி நேரம் பணியாற்றும் வகை செய்த மசோதாவுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் ஐ.டி துறைக்கான தலைநகரமாகக் கருதப்படுவது கர்நாடக மாநிலத்தின் பெங்களூர். கர்நாடக மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சட்டம் 1961-ல் திருத்தம் செய்து, ஐ.டி ஊழியர்களின் வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்த வேண்டும் எனக் கர்நாடக மாநில ஐ.டி நிறுவனங்களின் சார்பில் அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தொழிலாளர் சங்கம் (கேஐடியு) எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
பழைய சட்டத்தின்படி ஒரு நாளில் 3 ஷிஃப்ட்களில் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் புதிய சட்ட திருத்தம் கொண்டுவந்தால், ஒரு நாளில் இரண்டு ஷிஃப்டுகள் மட்டுமே இருக்கும் என்றும் இதனால் ஒரு ஷிஃப்ட் குறைந்து, பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிக நேரம் பணியாற்றுவதால் உற்பத்தி திறன் குறையும் என்றும் கர்நாடக ஐடி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் புதிய சட்டத் திருத்தத்தை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரியுள்ளது.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, இந்தியாவின் பணி கலாச்சாரம் மாற வேண்டும் என்றும், இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தபோது பெரும் விவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more ; நிபா வைரஸ்-க்கு பலியான 14 வயது சிறுவன்..!! பொது இடங்களில் மாஸ்க் அணிய கட்டாயம்..!!