சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் தான் விண்கல் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. விண்கற்கல் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. எனவே பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஆனால் சில சமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை பூமியை கடந்து சென்றால் அல்லது மோதினால் ஆபத்தானதாக இருக்கலாம்..
எனவே, இந்த அச்சுறுத்தல்களை சரியான நேரத்தில் சமாளிக்க, நாசா விண்கற்களின் இயக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில், வரும் நாட்களில் பூமியை கடக்க உள்ள விண்கற்கள் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது.. அதன் முழுவிவரம் இதோ..
2023 FA7: 92 அடி கொண்ட கிட்டத்தட்டன் ஒரு விமானத்தின் அளவுகொண்ட விண்கல், இன்று பூமியை கடக்க உள்ளது.. இந்த விண்கல் 1,400,000 கிமீ தொலைவில் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
2023 GE: 35 அடி பேருந்து அளவிலான விண்கல் நாளை (ஏப்ரல் 5) பூமியை கடக்க உள்ளது.. இது 5,68,000 கி.மீ தொலைவில் பூமியை கடக்கும்.
2023 FQ7: 65 அடி கொண்ட இந்த விண்கல் ஏப்ரல் 6 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளது…
2023 FZ3: 150 அடி கொண்ட ஒரு விமானத்தின் அளவுகொண்ட மிகப்பெரிய விண்கல், 67,656 கிமீ வேகத்தில் பூமியை நெருங்குகிறது. இந்த பிரமாண்டமான விண்கல், ஏப்ரல் 6 ஆம் தேதி பூமியில் இருந்து 4,190,000 கிமீ தொலைவில் கடக்க உள்ளது.