fbpx

காதலியை, மனைவியுடன் சேர்ந்து கொலை செய்த காதலன்!… 30 துண்டுகளாக வெட்டி காட்டில் புதைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் 21 வயது இளம்பெண்ணை தனது மனைவியுடன் சேர்ந்து கொலை செய்த காதல், உடலை 30 துண்டுகளாக வெட்டி காட்டில் புதைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் முருமாதிஹி கிராமத்தை சேர்ந்த பெண் திலாபதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திர ரௌத் என்ற நபரை காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் சந்திர ரௌத்தை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனார் சந்திர ரௌத் ஏற்கனவே திருமணம்ஆனவர். அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது. இந்தநிலையில், கடந்த வியாழன் அன்று இரவு அவரது வீட்டிற்கு சென்று, சந்திர ரௌத் மனைவியின் முன்பே தன்னை திருமணம் செய்யுமாறு, திலாபதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்திர ரௌத் மற்றும் அவரது மனைவி, இளம்பெண்ணை சரமாரியாக அடித்துள்ளனர். அவர்கள் அடித்ததில், அப்பெண் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். இதையடுத்து இளம்பெண்ணின் உடலை 30 துண்டுகளாக வெட்டி காட்டில் புதைத்துள்ளனர். இதற்கிடையில், இளம்பெண் காணாமல் போனதை அடுத்து, பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் இளம்பெண்ணை சந்திர ரௌத் மற்றும் அவரது மனைவி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Kokila

Next Post

மகிழ்ச்சி செய்தி...! TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.7-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு...!

Tue Nov 28 , 2023
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு 25.10.2023 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 30.11.2023 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளதால் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக […]

You May Like