fbpx

வெட்கமா இல்லையா? கள்ளசாராயம் குடித்தவர்களுக்கு ரூ.10 லட்சம்.. இறந்த குழந்தைக்கு 5 லட்சம் கொடுக்க முடியாதா? – நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை திருவாதவூர் அகதிகள் முகாமை சேர்ந்த அதிபதி, என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த 12.5.2014-ல் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து எனது 11 வயது மகள் சரண்யா உயிரிழந்தார். அதற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2014 ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சிறுமிக்கு 5 லட்சம் பணம் வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது. சுவர் இடிந்து உயிரிழந்த குழந்தை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியாதா? வெட்கமாக இல்லையா? எவ்வாறு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தீர்கள்? என சரமாரி கேள்வி எழுப்பினர். மேலும், மேல்முறையீடு தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு.

Read more ; விஜய்யின் தவெக கட்சிக் கொடியில் இடம்பெறும் வாசகம்..!! என்ன தெரியுமா..?

English Summary

The Madurai branch of the High Court has ordered the government to pay a fine of Rs 5 lakh to the child who died in a wall collapse accident at a Sri Lankan refugee camp near Madurai.

Next Post

இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தள்ளிய ஷ்ரத்தா கபூர்..!! ஒரே படத்தில் குவிந்த ஃபாலோயர்ஸ்!!

Wed Aug 21 , 2024
After Virat Kohli and Priyanka Chopra, Shraddha Kapoor is the most followed on Instagram.

You May Like