fbpx

அவனியாபுரத்தை அதிரவிட்ட ஆட்ட நாயகன்..!! காரை தட்டித் தூக்கிய கார்த்திக்..!! யார் இவர்..?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை. பொங்கல் நாளன்று அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டில் அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியான நேற்று நடைபெற்றது.

மொத்தம் 10 சுற்றுகள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், மொத்தம் 817 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 400 வீரர்கள் களம் கண்டனர். இதில், 17 காளைகளை பிடித்து மதுரை அவனியாபுரம் கார்த்திக் முதலிடத்தை பிடித்தார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல், 13 காளைகளை பிடித்து மதுரை அவனியாபுரம் மாரியப்பன் ரஞ்சித் இரண்டாம் இடத்தை பிடித்தார். 9 காளைகளை பிடித்து சிவகங்கை திருப்புவனம் முரளிதரன் மற்றும் தேனி முத்துகிருஷ்ணன் ஆகியோர் 3ஆம் இடத்தை பிடித்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட சிறந்த காளையின் உரிமையாளர் அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆர். கார்த்திக்கிற்கும் நிசான் கார் பரிசு வழங்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்த கார்த்திக் கூறுகையில், ”காயம் பட்டாலும் நம் ஊருக்கு நாம் தான் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். இவர், கடந்த ஆண்டில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்தார். அதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 24 காளைகளை அணைந்து முதலிடம் பிடித்து சொகுசு காரை பரிசாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அண்ணனுக்கே செக் வைக்கும் ஒய்.எஸ்.ஷர்மிளா..!! ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம்..?

Tue Jan 16 , 2024
ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ருத்ரராஜு கிடுகு பதவியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனால் ஆந்திரா காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி (ஏபிசிசி) தலைவர் ருத்ரராஜு கிடுகு நேற்று பதவியில் இருந்து விலகினார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகளுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தனது ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரசுடன் […]

You May Like