மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டிருந்தபோது, மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி மருத்துவரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
கேரளாவில் தனது மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி, கணவர் ஒருவர் அந்த மருத்துவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.. இந்த சம்பவம் கடந்த மாதம் 8-ம் தேதி நடந்துள்ளது.. இந்நிலையில் மருத்துவரை தாக்கிய கணவர் முன் ஜாமீன் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஏ பதருதீன் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “ ஜனவரி 8 ஆம் தேதி மாலை 6 மணியளவில், குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியை, மருத்தவர் பரிசோதித்தார்.. பின்னர் மனைவியின் உடலைத் தொட்டதாகக் கூறி மருத்துவரின் காலரைப் பிடித்து அறைந்துள்ளார்..” என்று தெரிவித்தார்..
இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர், மருத்துவர் மனுதாரரின் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டார்.. அதைத் தொடர்ந்து மருத்துவர் மீது மனைவி புகார் அளித்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி ” நோயாளிகளை மருத்துவ ரீதியாக பரிசோதிக்கும் போது, நோயாளிகளைத் தொடாமல், நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முறையைக் கற்றுக்கொள்வதில் தங்கள் ஆற்றலையும் நேரத்தையும் மருத்துவர்கள் செலவழிக்கின்றனர்.. நோயாளிகளைத் தொடாமல் சிகிச்சை அளிக்க முடியாது. மனுதாரரின் உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக, மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் ஒரு மருத்துவர் தனது மருத்துவத் தொழிலைச் செய்வது கடினம்.
இதயத் துடிப்பைக் கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் நோயாளியின் இடது மார்புப் பகுதியில் ஸ்டெதாஸ்கோப்பை வைப்பதும் அடங்கும்… எவ்வாறாயினும், ஒரு மருத்துவர் தங்கள் வரம்புகளை மீறும் தவறான நடத்தைக்கான உண்மையான வழக்குகளை புறக்கணிக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில், நோயாளிகளை பரிசோதிக்கும் போது மருத்துவர் வரம்பை மீறி நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்பதை இந்த நீதிமன்றம் உணர்ந்துள்ளது. இதுபோன்ற உண்மையான வழக்குகளை முழுமையாக நிராகரிக்க முடியாது.. அந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை ஆதாரங்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் தான் பிரிக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்.
மறுபுறம் அரசுத் தரப்பு, முன்ஜாமீன் மனுவை கடுமையாக எதிர்த்ததுடன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு கிரிமினல் பின்னணி இருப்பதாகவும், அவர் மீது பல்வேறு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி “நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்காத அபாயகரமான சூழ்நிலை உருவாகும் என்றும், பொதுமக்களின் சுகாதாரத்தை முறையாகப் பேணுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறி முன்ஜாமீன் மனுவை நிராகரித்தார்..