ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது விலையுயர்ந்த மற்றும் பாதுகாப்புமிக்க அருஸ் செனெட் (Aurus Senat) காரை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். ரஷ்யாவின் ரோல்ஸ்-ராய்ஸ் என அழைக்கப்படும் இந்த காரை பற்றியும், எதற்காக திடீரென இந்த அரசியல் பாராட்டு என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புதின் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான இந்த சந்திப்பு வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்றது. இரு நாடுகளும் அருகருகே அமைந்திருப்பதினாலேயே ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான உறவு வலுவாக உள்ளது. இதனை மீண்டும் உலகிற்கு காட்டும் விதமாகவே இந்த சந்திப்பு அரங்கேறியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஓர் கார் பிரியர் ஆவார். தன் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் கொண்டுவரும் வாகனங்களை ஆர்வத்துடன் இவர் பார்ப்பது வழக்கம். அந்த வகையில், விளாடிமிர் புதின் வந்த அருஸ் செனெட் காரையும் ஆர்வமாக பார்த்துள்ளார்.
இதனை அடுத்து, சந்திப்பின் நினைவு பரிசாக இந்த காரை வைத்துக் கொள்ளுங்கள் என அருஸ் செனெட்டை புதின் வழங்கியுள்ளார். அருஸ் செனெட் ஆனது ரஷ்ய அதிபரின் அலுவலக கார் ஆகும். இந்த காரை அருஸ் மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இங்கிலாந்தில் செயல்படும் ரோல்ஸ்-ராய்ஸை போன்று ரஷ்யாவிற்கென ஒரு லக்சரி கார் நிறுவனம் இருக்க வேண்டும் என விளாடிமிர் புதினின் ஆணைக்கிணங்க உருவாக்கப்பட்டதே அருஸ் மோட்டார்ஸ் ஆகும்.
2018ஆம் ஆண்டில் இருந்துதான் இந்த நிறுவனம் கார்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. ஆனால், முதல் 3 வருடங்களுக்கு அதாவது 2021ஆம் ஆண்டு வரையில் அருஸ் உருவாக்கிய கார்கள் அதிபர் உள்பட அரசாங்க பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதன்பின்பே அருஸ் செனெட் கார் பொது மக்களின் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.
அதிபரின் காராக பயன்படுத்தும் அளவிற்கு அருஸ் செனெட் முழுவதும் ஆயுதங்களை தாங்கியது ஆகும். இந்த லக்சரி செடான் காரில் 4.4 லிட்டர் ட்வின்-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 590 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜினை இத்தாலியை சேர்ந்த போர்ஷேவின் உதவியுடன் அருஸ் மோட்டார்ஸ் உற்பத்தி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், போர்ஷே உடன் அருஸ் மோட்டார்ஸ் இணைந்து செயல்படுவதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு வழங்கப்பட்டுள்ள அருஸ் செனெட் காரில் என்னென்ன மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது தெரியவில்லை. ரஷ்ய அதிபர் பயன்படுத்தும் கார் என்பதால், முழுவதும் பாதுகாப்புமிக்கதாக இந்த கார் இருக்கும் என்பது உறுதி.
Read more ; சொந்த வீடு இல்லை என்ற கவலை இனி இல்லை!! பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பற்றி தெரியுமா?? முழு விவரம் இதோ!!