fbpx

Rain: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…! நாளை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்

Rain notification: நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் லேசான மழை பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில்அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும். நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மேலும் 26 முதல் 28-ம்தேதிவரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 29-ம் தேதி தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

English Summary: The Meteorological Department has said that rain may occur at a few places in Tamil Nadu tomorrow.

Vignesh

Next Post

லோக்சபா தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் BJP ஆட்சி தான்..!! முக்கிய புள்ளி சொன்ன பரபரப்பு தகவல்..!!

Sat Feb 24 , 2024
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எம்எல்ஏ-க்களை கட்சி தாவ வைத்து பாஜக ஆட்சி அமைக்கலாம் என அக்கட்சியின் தமிழ்நாடு துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் பகிரங்கமாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை மிரட்டும் வகையில் தற்போது தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். 2024 தேர்தலுக்கு பின் திமுகவின் 2 பங்கு எம்.எல்.ஏக்கள், அதிமுகவின் 5-ல் 4 பங்கு எம்.எல்.ஏக்களை கொண்டு பாஜக […]

You May Like