fbpx

நவம்பர் 1- ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழகத்தில் நவம்பர் 1- ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும்.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

அடடே...! 1 முதல்‌ 10 வகுப்பு வரை மாணவர்களுக்கு உதவித்தொகை...! 31-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள்...!

Sat Oct 29 , 2022
சிறுபான்மையினர்‌ இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளஇஸ்லாமியர்‌ , கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய அல்லது மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10 ஆம்‌வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்விஉதவித்தொகை பெறுவதற்கு […]

You May Like