fbpx

அசத்தல்…! தமிழக அரசு சார்பில் கான்கிரீட் வீடு கட்ட ரூ.95,000 வழங்கப்படும்…! அமைச்சர் அறிவிப்பு…!

வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை பேசிய அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் வடகிழக்குப் பருமவழை குறைந்துள்ளது. மூன்று நாளைக்குப் பிறகு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பாதிப்பால் மனித உயிரிழப்புக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இதேபோல் கால்நடை உயிரிழப்பில், பசு, எருமை ஒன்றிற்கு ரூ. 30,000, செம்மறி ஆடு, ஆடு, பன்றி ஒன்றுக்கு ரூ. 3,000; எருது ஒன்றிற்கு ரூ25,000; – கன்றுக்குட்டி ஒன்றிற்கு ரூ.16,000 ; கோழி ஒன்றிற்கு 100 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்.

குடிசை வீட்டிற்குள் தண்ணீர் சென்றிருந்தால் ரூ.4,800, குடிசை முழுமையாக சேதமடைந்திருந்தால் ரூ5,000, குடிசை பகுதியாக சேதமடைந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும். சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும். கான்கிரீட் வீடு சேதமடைந்திருந்தால் ரூ.5,200 ரூபாயும், கான்கிரீட் வீடு முழுமையாக சேதமடைந்திருந்தால் ரூ.95,000 வழங்கப்படும். மலைப்பாங்கான பகுதியில் உள்ள கான்கிரீட் வீடு முழுமையாக சேதமடைந்திருந்தால், 1 லட்சத்து 1,900 ரூபாய் வழங்கப்படும். வடகிழக்குப் பருவமழையால் தென்னை மரம் விழுந்தால் 18,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Vignesh

Next Post

பரபரப்பு...! இன்று 1,100 ஒன்றியங்களில் போராட்டம்...! அதிரடி காட்டும் தமிழக பா.ஜ.க...!

Tue Nov 15 , 2022
தமிழக முழுவதும் பாஜக சார்பில் இன்று 1100 ஒன்றியங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன் படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. போராட்டத்தில் மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த பாஜக […]

You May Like