நாட்டுப்புறப்பாடல் கலைஞர்கள் உட்பட அனைத்து கலைஞர்களையும் பாதுகாக்க ‘கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை’ பெயரில் கலாச்சாரத் துறை அமைச்சகம் ஒரு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.
கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை திட்டம் 3 பிரிவுகளைக் கொண்டுள்ளது. பல்வேறு கலாச்சார துறைகளிலும், இளைய கலைஞர்களுக்கு உதவித்தொகை விருது, பல்வேறு கலாச்சாரத் துறைகளில், சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மூத்த மற்றும் இளையோர் கௌரவத்தொகை விருது, கலாச்சார ஆராய்ச்சிக்கான தாகூர் தேசிய கௌரவத்தொகை விருது ஆகியவை இதில் அடங்கும்.
பல்வேறு கலாச்சார துறைகளின் இளைய கலைஞர்களுக்கான உதவித்தொகையாக 18 வயது முதல் 25 வயதுடையவர்களுக்கு 2 வருடங்களுக்கு மாதத்திற்கு 5,000 ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என நான்கு தவணைகளாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. பல்வேறு கலாச்சாரத் துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கான மூத்த கௌரவத்தொகை கலாச்சார ஆராய்ச்சிகளுக்காக 2 வருடங்களுக்கு, மாதம் ரூ.20,000 வீதம் 6 மாதங்களுக்கு ஒரு முறை என நான்கு தவணைகளாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.