fbpx

கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க புதிய செயலியை உருவாக்கிய மத்திய அரசு..‌.! என்ன பெயர் தெரியுமா.‌‌..?

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், “ஜல்தூத் செயலி”யை உருவாக்கியுள்ளது. இது கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் பயன்படுத்தப்படும். இதனை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், புதுதில்லியில் இன்று நடைபெறும் விழாவில், “ஜல்தூத் செயலி”யை அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர் மட்டத்தை ஆண்டுக்கு இருமுறை (பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய) காலங்களில் அளவிடுவதற்கான வேலைவாய்ப்புக்கு ஜல்தூத் செயலி உதவும். ஒவ்வொரு கிராமத்திலும் போதிய இடங்கள் (2-3) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவை அந்த கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை அறிய உதவும்.இந்த செயலியானது, சரியான தரவுகளுடன் பஞ்சாயத்துகளின் பணிகளை எளிதாக்குவதற்கு பயன்படுத்தப்படும். நிலத்தடி நீர் தரவுகள், கிராம பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டங்களின் ஒருபகுதியாக செயல்படுத்தப்படும்.

நீர்நிலைகளை மேம்படுத்தல் மற்றும் புதுப்பித்தல், காடுகள் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற திட்டங்களின் மூலம், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் நீர் மேலாண்மையை செயல்படுத்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

Vignesh

Next Post

தமிழகம் அமைதிப் பூங்காவா..? ஹெச்.ராஜா ட்விட்டரில் கேள்வி...

Tue Sep 27 , 2022
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தமிழகம் அமைதிப்பூங்காவா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கோவை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர், சேலம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகா் வீடுகள், கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால், தமிழ்நாடு முழுவதும் […]
’தனித் தமிழ்நாடு கேட்கும் திருமா’..!! ’தேசவிரோதியை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள்’..!! பரபரப்பு

You May Like