fbpx

தண்ணீரோடு தங்கம் வழியும் அதிசய ஆறு! இந்தியாவில் எங்கு இருக்கு தெரியுமா?

பல அதிசயங்களும், தீர்க்கப்படாத பல மர்மங்களும் நிறைந்த நாடு இந்தியா. அதில் ஒன்றுதான் ஜார்க்கண்ட் மாநிலம். ராஞ்சியில் உருவாகி, மேற்கு வங்கம், ஒடிசா வழியாக பாயும் சுவர்ணரேகா ஆறு. 474 கி.மீ. நீளம் கொண்ட இந்த நதியில் பாய்ந்தோடும் தண்ணீரோடு, தங்கமும் சேர்ந்து வழிந்தோடுவதுதான் ஆச்சரியமான தகவல்.

இந்த ஆற்றில் வரும் தங்கத் துகள்களை பிரித்தெடுத்து, அதன் மூலம் வாழ்க்கை நடத்துவதுதான் அப்பகுதி மக்களின் வழக்கமாக இருக்கிறது. அதாவது, இந்த ஆறுதான், அப்பகுதி மக்களின் முக்கியமான வாழ்வாதாரம். காலையில் சூரியன் உதிப்பதில் தொடங்கி, மாலையில் சூரியன் மறையும் வரை, ஆற்றில் வரும் மணலை சலித்து, அதிலிருந்து தங்கத் துகள்களை பிரிப்பதுதான், இந்த மக்களின் முக்கியமான அன்றாட வேலையாகும்.

இந்த ஆற்றில் எங்கிருந்து தங்கம் வருகிறது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், தங்கம் இருக்கும் பாறைகளில் தண்ணீர் வேகமாக வரும்போது, அப்போது ஏற்படும் உராய்வின் மூலம் தங்கத் துகள்கள் உருவாகி, ஆற்றில் அடித்து வரப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிறுபனம் ஆகவில்லை.

ஆனாலும், அங்கிருக்கும் மக்கள் மழைக்காலம் தவிர, பிற நாட்களில் ஆற்று மணலை சலித்து தங்கத் துகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்களாம். ஆனால் கிடைக்ககூடிய தங்கத் துகள்களின் அளவு ஒரு அரிசி அல்லது தானியத்தை விட  மிக மிக சிறியதாக இருக்குமாம்.  மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், பொதுமக்கள் யாரும் அதை கண்டுகொள்வதில்லை எனவும் கூறப்படுகிறது.

Read more ; BREAKING | போதையில் காரை ஓட்டிச் சென்று இருவரை ஏற்றிக் கொன்ற 17 வயது சிறுவன்..!! ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!!

English Summary

The miracle of gold flowing through Odisha, originating in Jharkhand, remains a mystery unsolved by many explorers till date.

Next Post

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு..!! டேவிட் வார்னர் அறிவிப்பு..!!

Tue Jun 25 , 2024
Australian opener David Warner has announced his retirement from international cricket.

You May Like