fbpx

வெயிலின் கோரத்தாண்டவம்!… தயார் நிலையில் இருங்கள்!… மத்திய அரசு எச்சரிக்கை!

Heat: நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக தீ தடுப்பு மற்றும் வெப்பஅலை தயார் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இருப்பினும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கத்தல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெப்பம் காரணமாக ஹீட்ஸ்ட்ரோக் உள்ளிட்ட நோய்களால் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் தீ தடுப்பு மற்றும் மின் பாதுகாப்பு தயார் நிலைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஆலோசனை நடத்தியது.

மத்திய சுகாதார அமைச்சக மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் அதுல் கோயல் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, வெப்பம் தொடர்பான நோய்களுக்கான சுகாதார அமைப்புகளின் தயார் நிலையை வலுப்படுத்த அரசின் வழிகாட்டுதல்களை செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது.

கடுமையான வெப்பம் தொடர்பான நோய்களுக்கு அவசரகால குளிரூட்டல் குறித்த வழிகாட்டுதல்கள், வெப்பம் தொடர்பான இறப்புகளில் பிரேத பரிசோதனை முடிவுகள் குறித்த வழிகாட்டுதல்கள் நாடு முழுவதுமுள்ள அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லுரிகளுக்கு வழங்கப்பட்டு, அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் வௌியிட்ட வெப்ப அலை குறித்த எச்சரிக்கைகளை பரப்புவது, வெப்பத்தால் தீ விபத்துகள் ஏற்பட்டால் நோயாளிகள், பணியாளர்கள், பார்வையாளர்கள் வௌியேற அவசரகால பதிலளிப்பு திட்டங்களை நிறுவுவது குறித்து அனைவருக்கும் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

Readmore: ஷாக்…! வரும் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வு…!

Kokila

Next Post

ஓபன் செய்யாமலேயே என்ன ஸ்டேட்டஸ் என கண்டுபிடிக்க முடியும்!! வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய அப்டேட்..!!

Fri Jun 7 , 2024
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் பக்கத்திற்கான புதிய தளவமைப்பைச்(layout)-யை வாட்ஸ்அப் பரிசோதித்து வருகிறது. அண்மையில் புதுபிக்கப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் பக்கம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இ்ந்த நிலையில் இவற்றை மாற்றி அமைப்பதற்கான வேலைகளில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளது. அந்த வகையில்,புதிய தளவமைப்புப் பக்கம், நிலை புதுப்பிப்புகளில் சில புதிய அம்சங்களும் இணைக்கபடவுள்ளது. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். வாட்ஸ்அப் அதன் உடனடி செய்தியிடல் தளத்திற்கான மற்றொரு புதிய தளவமைப்பை சோதித்து […]

You May Like